முகமது ஷமி உடன் இணைந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடிய ரஷித் கான்..!!


Image Courtesy : Twitter @MdShami11
x
Image Courtesy : Twitter @MdShami11
தினத்தந்தி 3 May 2022 7:52 PM IST (Updated: 3 May 2022 7:57 PM IST)
t-max-icont-min-icon

ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரம்ஜான் பண்டிகையை முகமது ஷமி உடன் இணைந்து கொண்டாடி உள்ளனர்

மும்பை,

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அறிமுக அணியாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி 9 போட்டிகளில் 8-ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ள குஜராத் அணி இன்னும் ஒரு [போட்டியில் வெற்றி பெற்றால் கூட அந்த வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்துவிடும்.

இந்த நிலையில் குஜராத் அணியின் ரஷித் கான் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகிய  ஆஃப்கானிஸ்தான் வீரர்களுடன் இணைந்து இந்திய வீரர் முகமது ஷமி ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சியுடன் இன்று கொண்டாடி உள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரஷித் கான் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகியோருடன் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட  புகைப்படத்தை முகமது ஷமி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Next Story