ஐபிஎல்- லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
மும்பை,
ஐபிஎல் 15வது சீசன் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 37-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நடப்பு சீசனின் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை அணி முதன் முதலாக களமிறங்குகிறது. முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் மும்பை வீரர்கள் களம் காண்கிறார்கள்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.
Related Tags :
Next Story