ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் : கேஎல் ராகுல் சாதனையை சமன் செய்தார் பாட் கம்மின்ஸ்


Image Courtesy : @IPL
x
Image Courtesy : @IPL
தினத்தந்தி 6 April 2022 11:52 PM IST (Updated: 6 April 2022 11:52 PM IST)
t-max-icont-min-icon

அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை கேஎல் ராகுல் உடன் கம்மின்ஸ் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

தொடக்கத்தில் அந்த அணி தடுமாறினாலும் சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 41 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

பின்னர் அவருடன் இணைந்து கம்மின்ஸ் தனது பங்கிற்கு சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட்டார். டேனியல் சாம்ஸ் வீசிய 16-வது ஓவரில் கம்மின்ஸ் தனியொருவராக 35 ரன்கள் குவித்து 14 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதே ஓவரில் கொல்கத்தா அணி 162 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கம்மின்ஸ் 15 பந்துகளில் 56 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காம்ல் இருந்தார். இந்த போட்டியில் அவர் 14 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் கேஎல் ராகுல் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Next Story