3-வது டெஸ்ட்: இங்கிலாந்து வீரர்கள் பட்டியல் வெளியீடு - டாம் சிப்லி, ஜாக் கிராலேக்கு இடமில்லை..


3-வது டெஸ்ட்: இங்கிலாந்து வீரர்கள் பட்டியல் வெளியீடு - டாம் சிப்லி, ஜாக் கிராலேக்கு இடமில்லை..
x
தினத்தந்தி 19 Aug 2021 1:16 AM (Updated: 19 Aug 2021 1:16 AM)
t-max-icont-min-icon

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை இங்கிலாந்து வெளியிட்டுள்ளது.

லண்டன்,

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது. இப்போட்டிக்கான இங்கிலாந்து வீரர்கள் பட்டியலை அந்த அணி அறிவித்துள்ளது. 

15 பேரை கொண்ட அந்த பட்டியலில் தொடக்க வீரர் டாம் சிப்லி மற்றும் ஜாக் கிராலே ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. கடந்த 2 டெஸ்ட் போட்டியிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் டாம் சிப்லி மற்றும் ஜாக் கிராலேக்கு 3-வது டெஸ்ட்டில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

3-வது டெஸ்ட்டில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து வீரர்களின் பட்டியல்:-

ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், பேர்ஸ்டோவ், ராய் பர்ன்ஸ், படலர், சாம் கர்ரன், ஹசீம் ஹமீது, லாரன்ஸ், ஷயூப் முகமது, டேவில் மாலன், ஓவர்டேன், ஒலி போப், ராபின்சன், மார்க் வுட்.  

Next Story