உலக கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானின் மிரட்டலை சமாளித்து பாகிஸ்தான் அணி ‘திரில்’ வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானின் மிரட்டலை சமாளித்து பாகிஸ்தான் அணி ‘திரில்’ வெற்றியை பெற்றது.
லீட்ஸ்,
10 அணிகள் இடையிலான 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் லீட்சில் நேற்று நடந்த 36-வது லீக் ஆட்டத்தில் ஆசிய அணிகளான பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கம் திருப்திகரமாக அமையவில்லை. கேப்டன் குல்படின் நைப் (15 ரன்), ஹஸ்மத்துல்லா ஷகிடி (0) ஆகிய இருவரது விக்கெட்டையும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி அடுத்தடுத்த பந்துகளில் கபளகரம் செய்தார். அவரது வேகமும், சுழல் ஜாலமும் ஆப்கானிஸ்தானை தடுமாற வைத்தது.
ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் 3 விக்கெட்டுக்கு 120 ரன்களுடன் (25 ஓவர்) நல்ல நிலையில் இருந்தது. முன்னாள் கேப்டன் அஸ்ஹார் ஆப்கன் (42 ரன், 35 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) போல்டு ஆனதும் மறுபடியும் வீழ்ச்சிக்குள்ளானது. பிறகு மிடில் வரிசையில் நஜிபுல்லா ஜட்ரன் (42 ரன், 54 பந்து, 6 பவுண்டரி) நிலைத்து நின்று விளையாடி ஆப்கானிஸ்தானை 200 ரன்களை கடக்க வைத்தார்.
50 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷகீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்டுகளும், வஹாப் ரியாஸ், இமாத் வாசிம் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து 228 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தானுக்கு 2-வது பந்திலேயே பேரடி விழுந்தது. பஹார் ஜமான் (0), முஜீப் ரகுமானின் சுழற்பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை. இதைத் தொடர்ந்து இமாம் உல்-ஹக்கும், பாபர் அசாமும் ஜோடி சேர்ந்து அணியை மீட்டெடுக்க போராடினர். முக்கியமான கட்டத்தில் அவர்கள் விக்கெட்டை தாரை வார்த்தனர். இமாம் உல்-ஹக் (36 ரன்), பாபர் அசாம் (45 ரன்) இருவருக்கும் சுழற்பந்து வீச்சாளர் முகமது நபி ‘செக்’ வைத்தார்.
சுழற்பந்து வீச்சாளர்கள் இடைவிடாது கொடுத்த குடைச்சலில் முகமது ஹபீஸ் (19 ரன்), ஹாரிஸ் சோகைல் (27 ரன்) ஆகியோரும் சிக்கினர். கேப்டன் சர்ப்ராஸ் அகமது (18 ரன்) தேவையில்லாமல் 2-வது ரன்னுக்கு ஆசைப்பட்டு ரன்-அவுட் ஆனார். முன்னணி வீரர்கள் நடையை கட்டியதால் பாகிஸ்தான் அணி பதற்றத்திற்குள்ளானது. அப்போது அந்த அணி 6 விக்கெட்டுக்கு 156 ரன்களுடன் (39 ஓவர்) பரிதவித்துக் கொண்டிருந்தது.
இதையடுத்து இமாத் வாசிமும், ஷதப் கானும் இணைந்து தங்கள் அணியை சிக்கலில் இருந்து காப்பாற்றினர். ஆப்கானிஸ்தான் கேப்டன் குல்படின் நைப் வீசிய ஒரே ஓவரில் (46-வது ஓவர்) இமாத் வாசிம் 3 பவுண்டரி உள்பட 18 ரன்கள் திரட்டினார். இது தான் ஆட்டத்தில் திருப்பு முனையாகும். ஷதப் கான் (11 ரன்) ரன்-அவுட் ஆனாலும் அடுத்து வந்த வஹாப் ரியாஸ் ஒரு சிக்சரை பறக்க விட்டு நெருக்கடியை தணித்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்ட போது, 4-வது பந்திலேயே இமாத் வாசிம் இலக்கை எட்ட வைத்தார்.
பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 230 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. இமாத் வாசிம் 49 ரன்களுடனும் (54 பந்து, 5 பவுண்டரி), வஹாப் ரியாஸ் 15 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். ஆல்-ரவுண்டராக மின்னிய இமாத் வாசிம் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

9-வது ஆட்டத்தில் ஆடி 4-வது வெற்றியை பெற்ற பாகிஸ்தான் அணி இதன் மூலம் அரைஇறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. ஆப்கானிஸ்தானுக்கு இது 8-வது தோல்வியாகும்.
இரு நாட்டு ரசிகர்கள் கைகலப்பு-வன்முறை
இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக ஸ்டேடியத்திற்கு வெளியே ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ரசிகர்கள் திடீரென கைகலப்பில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கம்பால் தாக்கியதுடன், தண்ணீர் பாட்டில்களையும் வீசினர். பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். வெறியாட்டம் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஆட்டம் தொடங்கிய பிறகு ஸ்டேடியத்திற்கு உள்ளேயும் கேலரியின் ஒரு பகுதியில் ரசிகர்களுக்குள் மோதல் உருவானது. இதையடுத்து இரு ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். அத்துடன் கலவரம் நின்றபாடில்லை.
இறுதிகட்டத்திலும் ஒரு சில ரசிகர்கள் தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டனர். கையில் கிடைத்தவற்றை தூக்கி வீசினர். ரசிகர் ஒருவர் அத்துமீறி ஆடுகளத்திற்குள் ஓடி வந்தார். அவரை பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து சென்றனர். ஆட்டம் முடிந்ததும் இரு நாட்டு அணி வீரர்களும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.

Related Tags :
Next Story