ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டெல்லி அணிக்கு 169 ரன்கள் இலக்கு


ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டெல்லி அணிக்கு 169 ரன்கள் இலக்கு
x
தினத்தந்தி 18 April 2019 9:51 PM IST (Updated: 18 April 2019 9:51 PM IST)
t-max-icont-min-icon

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணிக்கு 169 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி,

டெல்லியில்,  ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான 34-வது லீக் போட்டி நடைப்பெற்று வருகிறது. 

இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை எடுத்துள்ளது. மும்பை அணியில் அதிகபட்சமாக கிருணல் பாண்டியா 37 (26) ரன்கள், டி காக் 35 (27) ரன்கள், ஹர்திக் பாண்டியா 32 (15) ரன்கள், ரோகித் சர்மா 30 (22) ரன்கள் எடுத்தனர்.

டெல்லி அணியில் ரபடா 2 விக்கெட், அக்‌ஷர் பட்டேல் மற்றும் அமித் மிஸ்ரா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து டெல்லி அணி 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.

Next Story