ஐ.பி.எல் கிரிக்கெட்; மும்பை இந்தியன்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. #IPL2018 #MIVsRCB
மும்பை,
ஐ.பி.எல்-ன் 14வது லீக் போட்டியில் பெங்களுரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடந்த லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் மோதின. பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மும்பை அணியின் சார்பில் முதலில் களமிறங்கிய சூர்ய குமார் யாதவ் 0(1), இஷான் கிஷான் 0(1) ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அதிர்ச்சி அளித்தனர். அடுத்து களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா, எவின் லீவிஸ் ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது. பின்னர் சிறப்பாக விளையாடிய லீவிஸ் 65(42) ரன்களுக்கும், குர்னல் பாண்ட்யா 15(12), பொல்லார்டு 5(7) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அபாரமான ஆட்டத்தை வெளிபடுத்திய ரோகித் சர்மா 94(52) ரன்கள் எடுத்து சதமடிக்கும் வாய்ப்பை தவற விட்டார். ஹர்திக் பாண்ட்யா 17(5) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்து அசத்தியது. பெங்களூர் அணியின் சார்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ், கோரி ஆண்டர்சன் தலா 2 விக்கெட்டுகளும் வோக்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய பெங்களூர் அணியில் கேப்டன் வீராட் கோலியுடன் இணைந்து டி காக் களமிறங்கினார். டி காக் 19(12) ரன்கள் எடுத்திருந்த நிலையில் மெக்லினகான் பந்து வீச்சில் போல்டானார். அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் டி வில்லியர்சும் 1(2) ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். பின்னர் மந்தீப் சிங் 16(14), ஆண்டர்சன் 0(1), வாஷிங்டன் சுந்தர்7(8) ரன்கள் எடுத்திருந்த நிலையில் குர்னல் பாண்ட்யா பந்துவீச்சில் வெளியேற்றப்பட்டனர். அடுத்து வந்த கான் 5(6) ரன்கள் எடுத்த நிலையில் மார்கண்டே பந்து வீச்சில் வெளியேற்றப்பட்டார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் வீராட் கோலி தனது அரைசதத்தை பதிவு செய்தார். அடுத்து ஆட வந்த வோக்ஸ் 11(11), யாதவ் 1(1) ரன்களில் பும்ராவால் வெளியேற்றப்பட்டனர். தனி நபராக போராடிய விராட் கோலி 92 (62), முகமது சிராஜ் 8(3) ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக குர்னல் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் மெக்லினகான் தலா 2 விக்கெட்டுகளும், மார்கண்டே 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் மும்பை இந்தியன் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Related Tags :
Next Story