ரகசியமாக 3-வது திருமணம் செய்த முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான்?
புத்தாண்டின் போது பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசையல்வாதியுமான இம்ரான் கான் தனது 65 வது வயதில் 3 வதாக ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. #Pakistan #TehreekeInsaf #PTI #ImranKhan
இஸ்லாமாபாத்
பாகிஸ்தான் முன்னாள் வீரர் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் (வயது 65). தற்போது ”பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப்” என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். இவர் 1995-ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த ஜெமிமாவை திருமணம் செய்தார். 2 ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில், இருவரும் 2004-ம் ஆண்டு பிரிந்து விட்டனர். சமீப காலமாக இம்ரான்கான், டி.வி. பத்திரிகையாளரான ரேஹம் (42) என்பவரை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் இம்ரான்கான், இஸ்லாமாபாத்தில் உள்ள தனது பானி காலா பண்ணை வீட்டில் வைத்து ரேஹமை திருமணம் செய்து கொண்டார். இந்த ரேஹமும் ஏற்கனவே திருமணமானவர். இவருக்கு முதல் கணவர் மூலம் 3 குழந்தைகள் இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இம்ரான்கான் மீண்டும் ஒரு ரகசிய திருமணம் செய்து உள்ளதாக பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. .இம்ரான் கான், ஆன்மீக வழிகாட்டலுக்கு வருகை தந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த ரகசிய திருமணம் லாகூரில் புத்தாண்டில் நடைபெற்று உள்ளது.
இந்த திருமணத்தை பிடிஐ கட்சியின் காரியக்கமிட்டி உறுப்பினர் முப்தி சயீத் நடத்தி வைத்து உள்ளார். கடந்த 2015 இல் ரேஹம் கானையும் இவரே இம்ரான்கானுக்கு திருமணம் செய்துவைத்தார்.
இது குறித்து முப்தி சயீத்திடம் கேட்ட கேள்விக்கு அவர் சரியான பதிலை கூறவில்லை.
இம்ரான்கானின் அரசியல் செயலாளர் ஆவுன் சவுத்ரி மற்றும் செய்தி தொடர்பாளர் "இது பொறுப்பற்ற செய்தி . இது ஒரு வதந்தி முற்றிலும் கற்பனை கதை என ஆவுன் சவுத்ரி கூறி உள்ளார்.
#Pakistan / #TehreekeInsaf / #PTI / #ImranKhan
Related Tags :
Next Story