புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர் பிர்ஜூ மகாராஜ் காலமானார்


புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர் பிர்ஜூ மகாராஜ் காலமானார்
x
தினத்தந்தி 17 Jan 2022 8:25 AM IST (Updated: 17 Jan 2022 8:25 AM IST)
t-max-icont-min-icon

புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞரான பிர்ஜூ மகாராஜ் தன்னுடைய 83 வது வயதில் இன்று காலமானார்.

புதுடெல்லி,

புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞரான பிர்ஜூ மகாராஜ் இன்று காலமானார். 83 வயதான பிர்ஜூ மகாராஜ் நேற்றிரவு, டெல்லியில் உள்ள தனது வீட்டில் பேரப்பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பிர்ஜூ மகாராஜ் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். சமீப காலமாக சிறுநீரகக் கோளாறு காரணமாக பிர்ஜூ மகாராஜ் டயாலிசிஸ் சிகிச்சைப் பெற்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல கதக் நடனக் கலைஞர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவரான பிர்ஜூ மகாராஜ் தனது திறமைக்காக நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது பெற்றுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் திரைப்படத்தில் 'உன்னைக் காணாத நான்' என்ற பாடல் இடம்பெற்றிருக்கும். இந்த பாடலில் வரும் கதக் நடனத்தை பிர்ஜூ மகாராஜ் தான் நடனவடிவமைப்பு செய்தார்.


Next Story