'முருங்கைக்காய் சிப்ஸ்' பட போஸ்டர்: அதுல்யா ரவிக்கு முத்தம் கொடுத்த ஆசாமி


முருங்கைக்காய் சிப்ஸ் பட போஸ்டர்: அதுல்யா ரவிக்கு முத்தம் கொடுத்த ஆசாமி
x
தினத்தந்தி 24 Dec 2021 7:59 AM IST (Updated: 24 Dec 2021 8:03 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் சாந்தனு நடித்து கடந்த 10 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் 'முருங்கைக்காய் சிப்ஸ்'.

சென்னை,

அறிமுக டைரக்டர் ஸ்ரீஜர் இயக்கத்தில் நடிகர் சாந்தனு நடித்து கடந்த 10 ஆம் தேதி வெளிவந்த  திரைப்படம் 'முருங்கைக்காய் சிப்ஸ்'. இந்த படத்தில் சாந்தனுவிற்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ரேஷ்மா, பாக்கியராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். 

லிப்ரா புரொடக்‌சன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரித்து இருந்தார். இந்த படத்தின் டிரைலர் வெளியான தேதி முதல் ரசிகர்கள் மத்தியில் பெரும்  பெரும் வரவேற்பைப் இப்படம் பெற்றது.

இது குறித்து போஸ்டர்கள் சென்னையில் பல இடங்களில் ஒட்டப்பட்டு இருந்தது .இதனிடையே அம்பத்தூர் பகுதியில் படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த நபர் போஸ்டர் அருகே வெகு நேரம் நின்றிருந்தார். சுற்றும் முற்றும் பார்த்த அந்த நபர் திடிரென போஸ்டரில் இருந்த அதுல்யா ரவிக்கு முத்தம்  கொடுத்தார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது. 

Next Story