93-வது ஆஸ்கர் விருதுகள் - சிறந்த இயக்குனர் விருதை தட்டிச்சென்ற சீன பெண் இயக்குனர் குளோயி சாவ்

93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ்,
உலக அளவில் சினிமாதுறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டு தோறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சினிமா துறையின் உச்சபட்ட விருதான ஆஸ்கரை பெறுவதில் உலகின் பல்வேறு சினிமா பிரபலங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், 93-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்று வருகிறது.
அதில் சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை ’நோமெட்லெண்ட்’ படத்திற்காக சீன பெண் இயக்குனர் குளோயி சாவ் வென்றார்.
சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது ஜூடாஸ் அண்ட் தி பிளக் மெசியா படத்தில் நடித்த டெணியல் கலூயா வென்றார்.
சிறந்த உண்மையான திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை ‘பிராமிசிங் யெங் உமன்’ திரைப்படம் வென்றது.
சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை ‘த ஃபாதர்’ திரைப்படம் வென்றது.
சிறந்த அணிமேஷன் பியூச்சர் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘சோல்’ திரைப்படம் வென்றது.
சிறந்த சர்வதேச பியூச்சர் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘அன்அதர் ரவுண்ட்’ திரைப்படம் வென்றது.
ஆஸ்கர் விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், 93 ஆவது ஆஸ்கர் நிகழ்ச்சிகள் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சில மாதங்கள் தள்ளிவைக்கப்பட்டு இன்று நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story