இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது -கேரள அரசு அறிவிப்பு


இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது -கேரள அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 26 Dec 2019 9:41 PM IST (Updated: 27 Dec 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கேரள அரசு சார்பில் ஹரிவராசனம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக அதிக பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஹரிவராசனம் விருதை கேரளா அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. இந்த விருதில் ரூ.1 லட்சம் பணம், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும்.

கடந்த 2019-க்கான ஹரிவராசனம் விருதை பாடகி பி.சுசிலாவுக்கு வழங்கப்பட்டது. இந்தநிலையில் 2020-ம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதை கேரளா அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் 2020-ம் ஆண்டுகான விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்பட உள்ளது.

வரும் 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந்தேதி சபரிமலை சன்னிதானத்தில் வைத்து நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த விருது இளைய ராஜாவுக்கு வழங்கப்பட உள்ளது. அதே நிகழ்வில் இளையராஜாவுக்கு ‘வணக்கத்துக்குரிய இசைஞானி’ என்ற பட்டமும் வழங்கப்பட உள்ளது. ஹரிவராசனம் விருது பாடகர் கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ், கே.எஸ்.சித்ரா உள்ளிட்டோருக்கும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story