தமிழகம் இழந்த அரசியல் மாண்பை மீட்டெடுக்க அரசியலுக்கு வந்திருக்கிறோம்-கமல்ஹாசன்
தமிழகம் இழந்த அரசியல் மாண்பை மீட்டெடுக்க அரசியலுக்கு வந்திருக்கிறோம். என கமல்ஹாசன் வணிகர் தின விழாவில் பேசினார். #KamalHassan
சென்னை
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர் கூறிய முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* நாம் கொடுக்கும் வரிப்பணத்தில், வட மாநில விவசாயிகள் நிவாரணம் பெறுகின்றனர். தேவையில்லாமல் கடையடைப்பு இல்லை என்பதை பாராட்டுகிறேன்.நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய அங்கம் வகிப்பவர்கள் வணிகர்கள்
* அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த மற்ற துறைகளுடன் வணிகத்துறையும் இணைவது அவசியம். கிராமசபை கூட்டங்களில் வணிகர்களும் பங்கேற்பது முக்கியம்.கிராம சபைகளில் பங்கேற்றால் வணிகமும் மேம்படும்.
* மக்களுக்கு இடையூறு இன்றி போராட்டம் நடத்த வேண்டும் என்பது மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை.
* தமிழ்நாட்டை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் கடமை நமக்கு உள்ளது, தமிழகம் இழந்த அரசியல் மாண்பை மீட்டெடுக்க வந்திருக்கிறோம். என கூறினார்.
Related Tags :
Next Story