சினிமா மீது விதிக்கப் படும் வரி விதிப்பை எதிர்த்து நிச்சயம் குரல் கொடுப்பேன் கமல்ஹாசன்


சினிமா மீது விதிக்கப் படும் வரி விதிப்பை எதிர்த்து நிச்சயம் குரல் கொடுப்பேன் கமல்ஹாசன்
x
தினத்தந்தி 2 July 2017 3:15 AM IST (Updated: 2 July 2017 12:55 AM IST)
t-max-icont-min-icon

சினிமா மீது விதிக்கப் படும் வரி விதிப்பை எதிர்த்து நிச்சயம் குரல் கொடுப்பேன் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை,

வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

“ஒரே நாடு ஒரு வரி என்ற ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் சரக்கு, சேவை வரி விதிப்பை வரவேற்கிறேன். ஆனாலும் தற்போது உள்ள வரி விதிப்பு வித்தியாசங்களில் சில திருத்தங்கள் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். அது முடியாத பட்சத்தில் தமிழ் சினிமாவுக்கு பெரிய அழுத்தமாகவே இந்த சரக்கு சேவை வரி அமையும். சினிமா மீது விதிக்கப் படும் இந்த வரி விதிப்பை எதிர்த்து நிச்சயம் குரல் கொடுப்பேன்.”

மேற்கண்டவாறு கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

Next Story