வல்லரசாக பிறகு மாறலாம் முதலில் விவசாயிகளுக்கான நல்லரசு வேண்டும்- நடிகர் விஜய் பேச்சு


வல்லரசாக பிறகு மாறலாம்  முதலில் விவசாயிகளுக்கான நல்லரசு  வேண்டும்- நடிகர் விஜய் பேச்சு
x
தினத்தந்தி 12 Jun 2017 11:08 AM IST (Updated: 12 Jun 2017 11:07 AM IST)
t-max-icont-min-icon

முதலில் விவசாயிகளுக்கான நல்லரசு நாடாக இந்தியா மாற வேண்டும், வல்லரசாக மாறுவதை பிறகு பார்க்கலாம் என நடிகர் விஜய் கூறினார்

தனியார் நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய் கூறியதாவது:-

நாம் அனைவரும் நன்றாக இருக்கும் நிலையில், நமக்கெல்லாம் உணவளிக்கும் விவசாயிகள் நன்றாக இல்லை.

நமக்கு சோறு போடும் விவசாயிகள் நன்றாக இல்லை. 3 வேளை உணவு சுலபமாக கிடைப்பதால் அதன் மதிப்பு தெரியாமல் போய்விட்டதாக கூறிய விஜய், அடுத்த சந்ததிக்கு உணவு இல்லாமல் போகும் நிலை ஏற்படும்  என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அரிசியை உற்பத்தி செய்யும் விவசாயிகள் அதை இலவசமாக பெற ரேஷன் கடையில் வரிசையில் நிற்கிறார்கள் என்றும், விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட.

முதலில் விவசாயிகளுக்கான நல்லரசு நாடாக இந்தியா மாற வேண்டும், வல்லரசாக மாறுவதை பிறகு பார்க்கலாம் இவ்வாறு அவர் கூறினார்.

Next Story