நடிப்பு எனது வேலை; என் வேலையை செய்ய புறப்பட்டுள்ளேன் -நடிகர் ரஜினிகாந்த்


நடிப்பு எனது வேலை; என் வேலையை செய்ய புறப்பட்டுள்ளேன் -நடிகர் ரஜினிகாந்த்
x
தினத்தந்தி 27 May 2017 5:34 PM IST (Updated: 27 May 2017 5:34 PM IST)
t-max-icont-min-icon

காலா படம் சூட்டிங்கிற்காக நடிகர் ரஜினிகாந்த் மும்பை புறப்பட்டார்.

சென்னை,

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்தார் நடிகர் ரஜினிகாந்த். அரசியலுக்கு வருவது உறுதி என்பதை அவர் தனது ரசிகர்கள் மத்தியில் சூசகமாக தெரிவித்தார்.  அவர் அரசியலுக்கு வருவதற்கு சிலர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.ரஜினி அரசியலுக்கு வரப்போவது நூறு சதவீதம் உண்மை என அவர் நண்பர் ராஜ் பகதூர் ஊடகங்களில் கூறினார்.

இந்நிலையில் நாளை மும்பையில் காலா படப்பிடிப்பு தொடங்குகிறது. இதில் கலந்து கொள்வதற்காக போயஸ் கார்டன் வீட்டிலிருந்து புறப்பட்ட ரஜினியிடம் செய்தியார்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர் கூறியதாவது:

நடிப்பு எனது வேலை; என் வேலையை செய்ய புறப்பட்டுள்ளேன். அரசியல் குறித்து வேறு எந்தக் கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை.

Next Story