எனது தொகுதி மக்களிடம் எந்த கருத்து வேறுபாடும் இல்லை நடிகர் கருணாஸ் பேட்டி

ஜெயலலிதாவின் ஆட்சி காக்கப்படவேண்டும் என்பதே எனது ஆசை எனது தொகுதி மக்களிடம் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என நடிகர் கருணாஸ் கூறி உள்ளார்.
சென்னை
முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரான நடிகர் கருணாஸ், அ.தி.மு.க சார்பில் இரட்டை இல்லைச் சின்னத்தில் திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா- பன்னீர்செல்வம் என இரண்டு அணியாக அ.தி.மு.க பிரிந்தது. சசிகலா அணியில் கருணாஸ் இருந்துவருகிறார்.
இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு இன்று காலை திடீரென வந்தார் கருணாஸ். ரஜினியுடன் அவர் நீண்ட நேரம் பேசினார். இந்த சந்திப்பு குறித்த காரணம் எதுவும் இதுவரை தெரியவில்லை.
சந்திப்புக்கு பிறகு கருணாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. மரியாதை நிமித்தமாக ரஜினிகாந்தை சந்தித்தேன்.என் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன்.அம்மா ஜெயலலிதாவின் ஆட்சி காக்கப்படவேண்டும் அவர அறிவித்த திடங்கள் தொடர வேண்டும் என்பதே எனது ஆசை. எனது தொகுதி மக்களிடம் எந்த கருத்து வேறுபாடும் இல்லை மக்கள் நன்றாக உள்ளனர். அரசியல்வாதிகள் அரசியல் செய்கிறார்கள். மக்களுக்கு சேவை செய்யவே நான் இங்கு வந்தேன் அதை நான் சேவை செய்து கொண்டு இருக்கிறேன். 10 பேர் கருப்பு கொடி காட்டுவதால் ஒன்றும் ஆகிவிடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story