பல்வேறு வகையான திரைப்படங்களில் நடிப்பதே எனது விருப்பம் மற்றும் லட்சியம்: நடிகர் ஜாக்கி சான் பேட்டி


பல்வேறு வகையான திரைப்படங்களில் நடிப்பதே எனது விருப்பம் மற்றும் லட்சியம்:  நடிகர் ஜாக்கி சான் பேட்டி
x
தினத்தந்தி 24 Jan 2017 8:07 PM IST (Updated: 24 Jan 2017 8:07 PM IST)
t-max-icont-min-icon

திரைப்படங்களில் சண்டை காட்சிகளில் நடிப்பதற்கு அச்சம் அடைந்தேன் என நடிகர் ஜாக்கி சான் கூறியுள்ளார்.

மும்பை,

நடிகர் ஜாக்கி சான் நடிப்பில் குங் பூ யோகா என்ற திரைப்படம் வெளிவர இருக்கிறது.  ஆங்கிலம், இந்தி மற்றும் சீன மொழியில் தயாராகியுள்ள இந்த படம் இந்தியாவிலும் வெளியாகிறது.  படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது.

62 வயது நிறைந்தவரான ஜாக்கி சான் இதில் கலந்து கொள்ள நேற்று காலை இந்தியா வந்துள்ளார்.  இந்த படத்தில் அவருடன் இணைந்து நடித்த இந்தி நடிகரான சோனு சூட் அவரை விமான நிலையத்தில் வரவேற்றார்.

தூண்டுதல்

அதன்பின் ஜுஹூ புறநகரில் அமைந்த ஓட்டலுக்கு சென்றார்.  அங்கு செய்தியாளர்களிடம் நேற்றிரவு பேசிய அவர், நான் சண்டை படங்களில் நடிப்பதற்கு நீங்களே (ரசிகர்கள்) தூண்டுதலாக இருந்தீர்கள்.

சண்டை காட்சியில் நடிப்பதற்கு நானும் அச்சமுற்று இருந்திருக்கிறேன்.  சண்டை காட்சி ஒன்றில் நடிக்கும்பொழுது, இது எனது கடைசி ஷாட் ஆக இருந்து விடுமோ என்று கருதியதுண்டு.

எனது லட்சியம்

என்னை சுற்றியுள்ள எண்ணற்ற ரசிகர்கள், அவர்களின் அன்பு மற்றும் ஆதரவு ஆகியவற்றினால் பல்வேறு வகையான திரைப்படங்களில் நடிக்க நான் விரும்புகிறேன்.  அதுவே எனது லட்சியம் என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், எத்தனை வருடங்களுக்கு என்னால் தொடர்ந்து படங்களில் நடிக்க முடியும்.  சண்டை காட்சிகளில் தோன்ற முடியும் என எனக்கு தெரியாது.  ஆனால் என்னால் முடிந்தவரை நான் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.  தன்னுடன் நடித்த சோனு சூட் பற்றி குறிப்பிட்ட அவர், நாங்கள் முதலில் சண்டை காட்சிக்கு தேவையான கலைகளை கற்று பின் நடிக்க வந்தோம்.

பாலிவுட்டில் சிறந்த நடிகர்கள்

சோனுவுக்கு அப்படியில்லை.  ஆனால் அவர் ஒரு வாரத்தில்  அனைத்தையும் கற்றுள்ளார்.  அவருக்கு, சரியான நேரத்தில் எதிர்கொள்வது மற்றும் அதற்கு பதிலடி கொடுப்பது ஆகியவை தெரியும் என கூறினார்.

அவரிடம், பாலிவுட்டில் சண்டை காட்சிகளில் தோன்றும் சிறந்த நடிகர்கள் யார் என கேட்டதற்கு, அதனை கூறுவது கடினம்.  ஆமீர் கான், சல்மான் கான் என கூறியுள்ளார்.

Next Story