திருப்பயத்தங்குடி ஊராட்சியில் ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
திருப்பயத்தங்குடி ஊராட்சியில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
திட்டச்சேரி,
நாகை மாவட்டம் திருமருகல் அருகே திருப்பயத்தங்குடி ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
இந்த தொட்டியில் குழாய்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் கீழத்தெரு, மெயின்ரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
பொதுமக்கள் அச்சம்
இந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தற்போது பழுதடைந்து காணப்படுகிறது.மேலும் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த குடிநீர் தொட்டி எந்த நேரத்திலும் இடித்து விழும் அபாயம் உள்ளது. இந்த வழியாக செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் குடிநீர் தொட்டி எப்போது இடிந்து விழுந்து விடுமோ? என்ற அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.
நடவடிக்கை
இந்த தொட்டியின் அருகே சிறுவர், சிறுமியர்கள் இதன் ஆபத்தை உணராமல் விளையாடுகின்றனர். .இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து விட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தர சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Related Tags :
Next Story