பராமரிப்பு பணி நிறைவு.. திருப்பதி தெப்பக்குளத்தில் இன்று முதல் பக்தர்கள் குளிக்க அனுமதி


பராமரிப்பு பணி நிறைவு.. திருப்பதி தெப்பக்குளத்தில் இன்று முதல் பக்தர்கள் குளிக்க அனுமதி
x

ஒரு மாத காலம் நடைபெற்ற சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தெப்பக்குளம் திறக்கப்பட்டது.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழாவிற்கு முன்னதாக, தெப்பக்குளத்தை சுத்தம் செய்து, பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம். இந்த பணிகள் முடியும் வரை தெப்பக்குளம் மூடப்படும்.

அவ்வகையில் இந்த ஆண்டு தூய்மைப் பணி மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக கடந்த மாதம் 1-ம் தேதி கோவில் தெப்பக்குளம் (சுவாமி புஷ்கரணி) மூடப்பட்டது. தெப்பக்குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

புஷ்கரணியில் உள்ள தண்ணீர் மின் மோட்டார்கள் மூலம் உறிஞ்சி வெளியேற்றப்பட்டது. சேறுகள் அகற்றப்பட்டு, குப்பைகள் வெளியேற்றப்பட்டன. படிக்கட்டுகள், தடுப்பு கம்பி வேலிகள், தளம் ஆகியவை சீரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டது.

ஒரு மாத காலம் நடைபெற்ற தெப்பக்குள பராமரிப்பு பணிகள் நேற்றுடன் (31.8.2024) நிறைவடைந்தன. இதையடுத்து இன்று முதல் (1.9.2024) தெப்பக்குளத்தில் பக்தர்கள் குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.


Next Story