கதாநாயகிகளுக்கு சவாலான விஷயங்கள் - கீர்த்தி சுரேஷ்


கதாநாயகிகளுக்கு சவாலான விஷயங்கள் - கீர்த்தி சுரேஷ்
x

தேசிய விருது பெற்ற நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் அதிக படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை தக்க வைத்துள்ளார். கதாநாயகர்களுடன் காதல் டூயட் பாடுவது, கதாநாயகியை முதன்மைப்படுத்தும் கதையில் தனித்து நடித்து பெயர் வாங்குவது என்று சகல வேடங்களிலும் கலக்கி வருகிறார். சினிமா அனுபவங்கள் குறித்து அவர் அளித்த பேட்டியில் இருந்து..

நடிகைகளுக்கு சவாலான விஷயங்கள் எது?

அழகாக இருப்பது பெரிய கஷ்டம் ஒன்றும் இல்லை. ஆனால் எதார்த்தமான கதாபாத்திரங்களில் நடிப்பது மட்டும் மிகவும் கஷ்டம். அதற்கு ஏற்ற மாதிரி காட்சியளிப்பதற்காக மணிக்கணக்காக மேக்கப் போட்டுக் கொள்ள வேண்டி வரும். இதுதான் பெரிய சவால்.

சினிமாவில் மறக்க முடியாத சம்பவம்?

சினிமாவுக்கு வந்த புதிதில் என்னை ராசி இல்லாதவள் என்றார்கள்.இந்தப் பெண்ணை வைத்து படம் எடுத்தால் சினிமா பாதியிலேயே நின்றுவிடும் என்ற முத்திரை குத்தி விட்டார்கள். அதை கண்டுகொள்ளாமல் முன்னேறியதால் இன்று இந்த நிலையில் இருக்கிறேன். என்னை நிராகரித்த அந்த நாட்களை மறக்க முடியாது.

ஹீரோயின் ஆகாமல் இருந்திருந்தால்...?

பேஷன் டிசைனர் ஆகியிருப்பேன். சென்னையில் பேஷன் டிசைனிங் கோர்ஸ் கூட செய்தேன்.

கடவுள் பக்தி இருக்கிறதா?

பூஜைகள் போன்றவை செய்ய நேரம் இருக்காது. ஆனால் பிரார்த்தனை செய்து கொள்வேன். வீட்டில் தினமும் விளக்கு எரிந்து கொண்டே இருக்கும். ஓம் நமோ நாராயணாய என்னும் மந்திரம் மென்மையான இனிய குரலில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அதை கேட்கும்போது மிகவும் பாசிட்டிவாக தோன்றும்.

விரும்பி சாப்பிடும் உணவுகள்...?

பருப்பு, ரசம், ஆனியன் தோசை, ரொட்டி, பச்சடிமிகவும் பிடிக்கும். சப் பாத்திைய ரோலாக செய்து கட் செய்து நூடுல்ஸ் செய்வேன். அது எனக்கு மிகவும் பிடிக்கும்.

மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ள என்ன செய்வீர்கள்?

டிரைவிங் செய்வேன். என் வளர்ப்பு நாய் நைக் உடன் விளையாடுவேன். ஒரு கப் காபி குடிப்பேன். சிறுவயது தோழியுடன் பேசுவேன். எல்லா மன அழுத்தமும் மாயமாகிவிடும்.

சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்த காட்சி ஏதாவது...?

`சர்க்காரு வாரி பாட்டா' தெலுங்கு படத்தில் மகேஷ் பாபுவை திட்ட வேண்டும். அதற்கு மிகவும் கஷ்டப்பட்டேன். நிறைய டேக்குகளை எடுத்தேன். அதேபோல தெலுங்கானா ஸ்லாங்கில் தெளிவாக தெலுங்கு வசனங்களை பேசுவதற்கும், டப்பிங் செய்வதற்கும் கஷ்டப்பட்டேன்.

சினிமாவில் இன்னும் யாருடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?

ஷாருக்கானுடன் இணைந்து நடனம் ஆட ஆசை.

சினிமாத் துறையில் நீங்கள் மிகவும் நேசிப்பவர்கள்...?

நடிகர்-நடிகைகள் சினிமாவிற்காக எவ்வளவு உழைத்தார்கள் என்பது திரையின் மீது பார்ப்பவர்களுக்கு தெரிந்து விடும். ஆனால் திரைக்குப் பின்னால் பணியாற்றுபவர்களின் கஷ்டம் யாருக்குமே தெரியாது. அவர்களின் உழைப்புக்கு அடையாள மாக நான் தங்க நாணயங்களை பரிசாக கொடுப் பதை வழக்கமாக வைத்துள்ளேன்.


Next Story