சினம்


சினம்
x
தினத்தந்தி 18 Jun 2021 11:37 PM IST (Updated: 18 Jun 2021 11:37 PM IST)
t-max-icont-min-icon

அருண் விஜய் நடித்த படம் ‘சினம்’, யதார்த்தமான போலீஸ் கதை.

அருண் விஜய் நடித்து அடுத்து திரைக்கு வரும் படம், ‘சினம்’. இதுபற்றி கேட்டபோது, அவர் சொன்னது:

‘‘சினம், யதார்த்தமான போலீஸ் படம். மற்ற போலீஸ் படங்களில் இருந்து மாறுபட்ட கதை. குடும்பத்துடன் தொடர்புடைய போலீஸ் படம். நாட்டில் தற்போது பாதிப்பை ஏற்படுத்தி உள்ள ஒரு பிரச்சினை, கதையில் இருக்கிறது. ‘பாரிவெங்கட்’ என்ற என்னுடைய போலீஸ் கதாபாத்திரம், மிக யதார்த்தமாக கையாளப்பட்டிருக்கும். ‘சினம்’ என்ற டைட்டிலுக்கு பொருத்தமாக இருக்கும். கதாநாயகி, பாலக் லால்வானி.

மிகத்திறமையான ஒளிப்பதிவாளர் என்று பேசப்படும் கோபிநாத், ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ஜி.என்.ஆர்.குமரவேலன் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார்.

படத்துக்கு தணிக்கை குழுவினர், ‘யு ஏ’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்’’.


Next Story