‘‘இதுவரை யாரும் படமாக்கியிராத உச்சக்கட்ட காட்சி’’


‘‘இதுவரை யாரும் படமாக்கியிராத உச்சக்கட்ட காட்சி’’
x
தினத்தந்தி 3 Jun 2021 10:59 PM IST (Updated: 3 Jun 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

அஜித்குமார் நடித்த ‘சிட்டிசன்’ படத்தை டைரக்டு செய்தவர், சரவணன் சுப்பையா.

இவர் நீண்ட இடைவெளிக்குப்பின் இயக்கியுள்ள படம், ‘மீண்டும்.’ நடிகர் மணிகண்டனை, `கதிரவன்' என்று பெயர் மாற்றி கதாநாயகனாக நடிக்க வைத்து இருக்கிறார், சரவணன் சுப்பையா.

கதாநாயகி, அனேகா. இதில் டைரக்டர் சரவணன் சுப்பையாவும் நடித்து இருக்கிறார். படத்தை பற்றி அவர் கூறியதாவது:-

‘‘தாய்நாட்டுக்கு எதிரான ஒரு முக்கிய பிரச்சினையை விசாரிக்கும்படி, கதாநாயகன் கதிரவனிடம் ஒப்படைக்கிறார்கள். இதை ஓரு சவாலாக ஏற்று களம் இறங்குகிறார், கதிரவன். அவரை எதிரிகள் பிடித்து சித்ரவதை செய்கிறார்கள். அந்த கொடூரம் அதிர்ச்சியின் உச்சம்.

படத்தின் உச்சக்கட்ட காட்சி, இதுவரை இந்திய திரையுலகில் யாரும் படமாக்கியிராதது. எஸ்.எஸ்.ஸ்டான்லி, யார் கண்ணன், கேபிள் சங்கர், சுப்பிரமணியசிவா, துரை சுதாகர், இந்துமதி, மோனிஷா, அனுராதா ஆகியோரும் நடித்துள்ளனர். ஹீரோ சினிமாஸ் சார்பில் சி.மணிகண்டன் தயாரித்துள்ளார்.’’

Next Story