மகேஷ்பாபுவை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ்


மகேஷ்பாபுவை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ்
x
தினத்தந்தி 25 April 2021 11:54 AM IST (Updated: 25 April 2021 11:54 AM IST)
t-max-icont-min-icon

‘மாஸ்டர்’ படத்தை டைரக்டு செய்தவர், லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்து கமல்ஹாசனை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தை டைரக்டு செய்தவர், லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்து கமல்ஹாசனை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். அந்த படத்தை இயக்கி முடித்த பின், மீண்டும் அவர் விஜய் நடிக்கும் படத்தை டைரக்டு செய்யப்போவதாக பேசப்படுகிறது.

இதற்கிடையில், தெலுங்கில் பிரமாண்டமான படங்களை தயாரித்து வரும் மைத்ரி மூவீஸ் என்ற பட நிறுவனம் லோகேஷ் கனகராஜை சந்தித்து தங்கள் நிறுவனத்துக்காக ஒரு தெலுங்கு படத்தை டைரக்டு செய்து தரும்படி, கேட்டுக் கொண்டிருக்கிறதாம். இதற்காக லோகேஷ் கனகராஜிடம் ஒரு பெரிய தொகையை அட்வான்ஸ் ஆக கொடுத்து இருக்கிறதாம். மேலும் பிரபாஸ், ராம் சரண் ஆகிய இருவரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்கள்.

இப்போது விஜய் நடிக்கும் 66-வது படத்தை முடித்த பின், மகேஷ்பாபுவை வைத்து ஒரு தெலுங்கு படத்தை இயக்க இருப்பதாக கூறப் படுகிறது.


Next Story