பேய் வேடத்தில் நடிக்க 4 மணி நேரம் ‘மேக்கப்’ போட்ட காஜல் அகர்வால்


பேய் வேடத்தில் நடிக்க 4 மணி நேரம் ‘மேக்கப்’ போட்ட காஜல் அகர்வால்
x
தினத்தந்தி 25 April 2021 11:49 AM IST (Updated: 25 April 2021 11:49 AM IST)
t-max-icont-min-icon

இந்த படத்தில் அவர் பேய் வேடத்தில் நடிக்கிறார். இதற்காக அவர் 4 மணி நேரம், ‘மேக்கப்’ போட்டு நடித்தாராம்.

‘பொம்மலாட்டம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான காஜல் அகர்வால், ஏறக்குறைய எல்லா பெரிய கதாநாயகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார். அதே வேகத்தில் திருமணமும் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் அவர் படங்களில் நடித்து வருகிறார்.

அதில் ஒரு படம், ‘கோஸ்டி’. இந்த படத்தில் அவர் பேய் வேடத்தில் நடிக்கிறார். இதற்காக அவர் 4 மணி நேரம், ‘மேக்கப்’ போட்டு நடித்தாராம். எந்த படத்திலும் இல்லாத அளவுக்கு வீட்டிலேயே நடித்து ஒத்திகை பார்த்துக் கொண்டாராம்.

கதாபாத்திரத்துக்காக அவர் தன்னை தயார்படுத்திக் கொண்ட விதம், படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தியது. “என் திரையுலக வாழ்க்கையில், ‘கோஸ்டி’ படம் ஒரு மைல் கல்லாக இருக்கும்” என்று காஜல் அகர்வால் கூறுகிறார்.

இந்த படத்தை (புதிய) ‘குலேபகாவலி’ படத்தை இயக்கிய எஸ்.கல்யாண் டைரக்டு செய்கிறார். சுதன் சுந்தரம், ஜி.ஜெயராம் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.

Next Story