3 பாகங்களாக ‘கொற்றவை’


3 பாகங்களாக ‘கொற்றவை’
x
தினத்தந்தி 21 April 2021 11:35 AM IST (Updated: 21 April 2021 11:35 AM IST)
t-max-icont-min-icon

“ஏற்கனவே வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்வு இப்போதும் தொடர்வது போல் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

பீட்சா, சூது கவ்வும், அட்டகத்தி, இன்று நேற்று நாளை, தெகிடி ஆகிய படங்களை தயாரித்த சி.வி.குமார், மாயவன், கேங்ஸ் ஆப் மெட்ராஸ் ஆகிய படங்களின் மூலம் இயக்குனர் ஆனார். அடுத்து இவர், ‘கொற்றவை’ என்ற படத்தை இயக்கி யிருக்கிறார். படத்தை பற்றி இவர் கூறுகிறார்:

“ஏற்கனவே வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்வு இப்போதும் தொடர்வது போல் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்பும், பின்புமான காலத்துக்கு ரசிகர்களை படம் அழைத்து சென்று பரவசத்தில் ஆழ்த்தும்.

முதல் பாகத்துக்கான படப் பிடிப்பு முடிவடைந்தது. சீரான இடைவெளியில் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி, மூன்றாவது பாகத்தில், பரபரப்பான முடிவுடன் ‘கொற்றவை’ நிறைவடையும்.

புதையல் வேட்டை தொடர்பான கதை, இது. மறைக்கப்பட்ட புதையலை கண்டறிய கதாநாயகன் எடுக்கும் சாகச முயற்சிகள் மெய்சிலிர்க்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளன. ராஜேஷ் கனகசபை கதாநாயகனாகவும், சந்தனா ராஜ், சுபிக்‌ஷா கதாநாயகிகளாகவும் அறிமுகமாகிறார்கள். எழுத்தாளர் தமிழ்மகன் வசனம் எழுதியிருக்கிறார்”.

Next Story