``பரத கலையை மோசமாக சித்தரிப்பதா?''


``பரத கலையை மோசமாக சித்தரிப்பதா?
x
தினத்தந்தி 21 April 2021 11:27 AM IST (Updated: 21 April 2021 11:27 AM IST)
t-max-icont-min-icon

டைரக்டர் கே.ஸ்ரீராம், முழுக்க முழுக்க பரதக்கலை பற்றிய ‘குமார சம்பவம்’ என்ற படத்தை எடுத்து முடித்து இருக்கிறார்.

இந்த படத்துக்கு, படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், நடனம், தயாரிப்பு, இயக்கம் ஆகிய பொறுப்புகளையும் ஏற்றிருப்பதுடன், கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறார்.

பரதம் சம்பந்தமான கதைக்கு இன்றைய அவசியம் என்ன? என்பதை அவர் தெரிவித்தார்.

“நான் 30 வருடங்களுக்கு மேலாக நாட்டிய துறையில் இருக் கிறேன். இன்றைய சினிமாவில், பரதநாட்டியத்தை மிக மோசமாக சித்தரிக்கிறார்கள். பரதம் கற்றுக்கொண்டால் பெண் தன்மை வந்துவிடும் என்ற தவறான கருத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது தொடர்வதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த படத்தை எடுத்து இருக்கிறேன்.

படத்தில் என்னுடன் நிகிதா மேனன், சாய் அக்ஷிதா, மீனாட்சி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். படம், விரைவில் வெளியாகும் என்கிறார், டைரக்டர் ஸ்ரீராம்”.

Next Story