போலீஸ்காரன் மகள்
‘போலீஸ்காரன் மகள்’ ஆணவக்கொலை பற்றி இன்னொரு புதிய படம்
ஆணவக்கொலைகள் பற்றி இதுவரை பல படங்கள் வந்துள்ளன. இன்னொரு புதிய படத்தின் கதையும் ஆணவக்கொலை பற்றி பேசுகிறது. இந்த படத்துக்கு, ‘போலீஸ்காரன் மகள்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கிய நந்தி கூறியதாவது:-
“ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ‘டிகிரி காலேஜ்’ என்ற (தெலுங்கு) படமே ‘போலீஸ்காரன் மகள்’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. படத்தின் பெயரில் ஏற்கனவே ஒரு பழைய படம் வெளிவந்து இருக்கிறது. ஸ்ரீதர் இயக்கி, முத்துராமன் நடிப்பில் வந்த படம் அது.
புதிய ‘போலீஸ்காரன் மகள்’ படத்தில் கதாநாயகன் வருண், கதாநாயகி திவ்யா ஆகிய இருவரும் மிக நெருக்கமாக நடித்துள்ளனர். தமிழ் படத்துக்கான வசனத்தை ஏ.ஆர்.கே.ராஜராஜா எழுதியிருக்கிறார். விஜயவாடா, பெங்களூரு ஆகிய இடங்களில் வளர்ந்த இந்த படத்தை கொண்டையா தயாரித்து இருக்கிறார்.
காவல் துறையில் சிறப்பு என்கவுண்டர் அதிகாரியாக இருக்கும் ஒருவர், காதல் என்ற வார்த்தையை கேட்டாலே படம் எடுக்கும் நாகமாக சீறுவார். இந்த நிலையில், அவருடைய மகள் வேறு சாதியை சேர்ந்த ஒரு இளைஞரை காதலிக்கிறார்.
காதல் வசப்படும் பல இளைஞர்களை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து சித்ரவதை செய்து கொன்றுவிடும் அவர், மகளின் காதலரை என்ன செய்கிறார்? என்பதே ‘போலீஸ்காரன் மகள்’ படத்தின் கதை”.
Related Tags :
Next Story