காதலருடன் இணைந்து நயன்தாரா காதல்-காமெடி படம் தயாரிக்கிறார்
‘ராக்கி’, ‘கூழாங்கல்’ ஆகிய 2 தரமான கதையம்சம் கொண்ட படங்களை வாங்கி, வெளியிட இருக்கிறார்கள்.
நயன்தாராவும், அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற சொந்த பட நிறுவனத்தை தொடங்கி தயாரித்தும், வினியோகம் செய்தும் வருகிறார்கள். ‘ராக்கி’, ‘கூழாங்கல்’ ஆகிய 2 தரமான கதையம்சம் கொண்ட படங்களை வாங்கி, வெளியிட இருக்கிறார்கள்.
இந்த 2 படங்களும் உலக பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டுகளை குவித்தன. அதைத்தொடர்ந்து இருவரும் சேர்ந்து ஒரு பொழுதுபோக்கு படத்தை தயாரிக்கிறார்கள். இந்த படத்துக்கு, ‘வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இது, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த காதல்-காமெடி படம். இதில் கே.கே, ஜொனிடா காந்தி ஆகிய 2 புதுமுகங்கள் கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்கிறார்கள்.
படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story