கபடி வீரரின் கதைக்காக 125 இடங்களில் படப்பிடிப்பு


கபடி வீரரின் கதைக்காக 125 இடங்களில் படப்பிடிப்பு
x
தினத்தந்தி 5 April 2021 6:38 PM IST (Updated: 5 April 2021 6:38 PM IST)
t-max-icont-min-icon

வேணு கே.சி.யின் எழுத்து-இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீனி குப்பலா தயாரிக்கிறார்.

1980-களில் இந்தியாவுக்காக விளையாடிய ஒரு கபடி வீரரின் கதை, ‘அர்ஜுன் சக்ரவர்த்தி’ என்ற பெயரில் படமாகி வருகிறது. வேணு கே.சி.யின் எழுத்து-இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீனி குப்பலா தயாரிக்கிறார்.

இதில் புதுமுகம் விஜயராமராஜு, சிஜாரோஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

படம், 2 வருடங்களாக வளர்ந்து வருகிறது. இதுவரை 125 இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. 1960 மற்றும் 1980-களில் இருந்த கிராமங்கள் கதையில் இடம்பெறுவதால், அவைகளை அரங்குகளாக அமைத்து படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் படம் தயாராகி வருகிறது. மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில், மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

Next Story