மனதை உலுக்கிய உண்மை சம்பவம் படமானது
‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக கவனம் ஈர்த்தவர், எஸ்.பி.ராஜாசேதுபதி.
இவர் சொந்த பட நிறுவனத்தை தொடங்கி, ‘ஜோதி’ என்ற படத்தை தயாரித்து இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
“இது ஒரு திகில் படம். உணர்ச்சிகரமான டிராமா வகையைச் சார்ந்தது. பத்திரிகைகளில் வந்த ஒரு உண்மை சம்பவம், மனதை உலுக்கியது. அதன் தாக்கத்தால் எழுதப்பட்ட காட்சிகளின் நீட்சியே திரைக்கதை. கட்டாயமாக குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.
எம்.ஜி.ஆர். அரசு திரைப்பட கல்லூரி இயக்குதல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற கிருஷ்ண பரமாத்மா, இந்த படத்தை இயக்கியிருக் கிறார். ‘8 தோட்டாக்கள்’, ‘ஜீ.வி.’ ஆகிய படங்களில் நடித்த வெற்றி கதாநாயகனாகவும், ‘டூ லெட்’, ‘திரவுபதி’ படங்களில் நடித்த ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
இவர்களுடன், ‘கோலி சோடா’ புகழ் கிரிசா குரூப், ‘ராட்சசன்’ புகழ் நான் சரவணன், மைம்கோபி ஆகியோரும் நடிக்க, நான் (தயாரிப்பாளர் ராஜாசேதுபதி) முக்கிய வேடம் ஏற்றுள்ேளன்.
33 நாட்கள் ஒரே கட்டமாக முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்து விட்டோம். படம், விரைவில் திரைக்கு வரும்”.
Related Tags :
Next Story