நீ சுடத்தான் வந்தியா


நீ சுடத்தான் வந்தியா
x
தினத்தந்தி 25 March 2021 9:28 PM IST (Updated: 25 March 2021 9:28 PM IST)
t-max-icont-min-icon

பேய் படத்தில், டைரக்டர் திடீர் மாற்றம்

ஒரு காட்டு பங்களாவை கதைக்களமாக கொண்ட பேய் படத்துக்கு, ‘நீ சுடத்தான் வந்தியா’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில் அருண்குமார் என்ற புதுமுக நடிகர் கதாநாயகனாக நடிப்பதுடன், படத்தை தயாரிக்கவும் செய்கிறார். இவருக்கு ஜோடியாக இலக்கியா நடித்து இருக்கிறார். படத்தை பற்றி அருண்குமார் சொல்கிறார்:-

“இது மர்மங்கள் நிறைந்த பேய் படம். ஒரு கோடீஸ்வரர் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்து, அவருக்கு சொந்தமான காட்டு பங்களாவை பரிசாக எழுதி வைக்கிறார். அவருடைய மகளும், மருமகனும் தேன்நிலவுக்காக அந்த காட்டு பங்களாவுக்குச் செல்கிறார்கள்.

அங்கு ஒரு பேய் இருக்கிறது. அது கோடீஸ்வரரின் மகளை பிடித்துக்கொண்டு தனது விருப்பத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறது. பேயிடம் இருந்து புதுமண ஜோடி தப்பினார்களா?, இல்லையா? என்பது கதை.

இந்தப் படத்தை முதலில் டைரக்டு செய்தவர், வேறு ஒருவர். சில காரணங்களால் அவர் மாற்றப்பட்டு படத்தின் எடிட்டர் கே.துரைராஜ் டைரக்டராக மாறினார்.

படப்பிடிப்பு சென்னை, ஏலகிரி மலை ஆகிய இடங்களில் நடைபெற்று முடிவடைந்தது.”

Next Story