டிராமா


டிராமா
x
தினத்தந்தி 8 March 2021 10:44 PM IST (Updated: 8 March 2021 10:44 PM IST)
t-max-icont-min-icon

8 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட சாதனைப்படம், ‘டிராமா’ சினிமா முன்னோட்டம்.

தமிழ் சினிமாவில், அவ்வப்போது சாதனைப் படங்கள் எடுக்கப்படுகின்றன. அந்த பட்டியலில் புதிதாக இடம்பெற்றுள்ள படம், ‘டிராமா.’ இதில் கிஷோர், சார்லி, நகுலன் வின்சென்ட், ஜெய்பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்திய சினிமாவில், ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் வியாபார ரீதியிலான படம் இது. 8 மணி நேரத்தில் இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. 180 நாட்கள் நடிப்பு மற்றும் தொழில்நுட்பங்களுக்கு ஒத்திகை பார்க்கப்பட்டு அதன் பிறகு படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது.

இதுபற்றி படத்தின் டைரக்டர் அஜூ கூறுகையில்...

“கிஷோர், சார்லி போன்ற அனுபவம் மிகுந்த நடிகர்கள் இப்படிப்பட்ட சவாலான படப்பிடிப்புக்கு ஒத்துழைத்து நடித்ததால்தான் நினைத்தபடி வெற்றி பெற முடிந்தது. நாங்கள் நினைத்ததை விட, பிரமாதமாக வந்து இருக்கிறது.

ஒரே ஷாட்டில் படமாக்குவது எளிதல்ல. அதுவும் ஒரு வியாபார ரீதியிலான படத்தில், இந்த முயற்சி சவாலானது. நடிகர்களின் அர்ப்பணிப்பாலும், படக்குழுவினரின் ஒத்துழைப்பாலும், சாதனையை எட்ட முடிந்தது. படம் பார்ப்பவர்களுக்கு இது புது அனுபவத்தை தரும் என் றார்.”

Next Story