ஜனநாயகம் விற்பனைக்கு அல்ல


ஜனநாயகம் விற்பனைக்கு அல்ல
x
தினத்தந்தி 8 March 2021 10:23 PM IST (Updated: 8 March 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

இரட்டை டைரக்டர்கள் இயக்கிய ‘ஜனநாயகம் விற்பனைக்கு அல்ல’ சினிமா முன்னோட்டம்.

தமிழ் பட உலகுக்கு இரட்டை டைரக்டர்கள் புதுசு அல்ல. கிருஷ்ணன்-பஞ்சுவில் ஆரம்பித்து தேவராஜ்-மோகன், பாரதி-வாசு என்று இரட்டை டைரக்டர்களின் பட்டியல் நீளும். இந்த பட்டியலில் புதுசாக இடம் பிடித்துள்ள இரட்டை டைரக்டர்கள்: ஏ.ஜீவரத்தினம்-சி.வேணு.

படத்தின் திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஏ.ஜீவரத்தினமும், சி.வேணுவும் டைரக்டு செய்யும் படத்துக்கு, ‘ஜனநாயகம் விற்பனைக்கு அல்ல’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. படத்தை பற்றி இரண்டு பேரும் கூறியதாவது:-

“ஒரு கிராமத்தின் வளர்ச்சிக்கும், கிராம மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் பாடுபடும் கிராமத்து தலைவர்தான் படத்தின் கதாநாயகன். அவனை காதலித்து மணக்கிறாள், கதாநாயகி. கிராமத்து துணைத்தலைவராக இருக்கும் வில்லன், கதாநாயகன் மீது அநியாயமாக பழிசுமத்தி தலைவர் பதவியில் இருந்து விரட்டுகிறான்.

இந்த நிலையில், ஊரில் மர்மமான செயல்கள் நடைபெறுகின்றன. அதை செய்வது யார்? என்பதை விறுவிறுப்பான திரைக்கதை விளக்கும். படப்பிடிப்பு சென்னை, காஞ்சிபுரம், கோவை ஆகிய இடங்களில் நடைபெற்று முடிவடைந்தது.

இந்த படத்தின் மூலம் வேல் சிவா கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். சரண்யா ஆனந்த் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். வடிவுக்கரசி, முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வேணு ஆனந்தி பிலிம்ஸ் சார்பில் சி.வேணு, ஆனந்தி ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.”

Next Story