விசித்திரன்


விசித்திரன்
x
தினத்தந்தி 8 March 2021 10:18 PM IST (Updated: 8 March 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.சுரேஷ்-பூர்ணா ஜோடியுடன் டைரக்டர் பாலா சொந்த படம், ‘விசித்திரன்’ சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் பாலா அடுத்து சொந்த படம் தயாரிக்கிறார்.

பெயர் சூட்டப்படாமலே வளர்ந்த இந்த படத்துக்கு இப்போது, ‘விசித்திரன்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. பட அதிபரும் நடிகருமான ஆர்.கே. சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். தர்மதுரை, சலீம் ஆகிய படங்களை தயா ரித்தவர், இவர்.

தாரை தப்பட்டை, மருது, நம்ம வீட்டுப்பிள்ளை ஆகிய படங்களில் நடித்து இருந்தார். பாலா தயாரிப்பில், ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘விசித்திரன்’ படத்தில், அவருக்கு மனைவியாக பூர்ணா நடிக்கிறார்.

கேரளாவில் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்த ‘ஜோசப்’ என்ற மலையாள படத்தின் தழுவல், இது. மலையாள படத்தை டைரக்டு செய்த பத்மகுமாரே ‘விசித்திரன்’ படத்தையும் இயக்குகிறார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜான் மகேந்திரன் வசனம் எழுதியிருக்கிறார்.

Next Story