சினிமா கனவுகள்
ஒரு புது டைரக்டரின் ‘சினிமா கனவுகள்’ சினிமா முன்னோட்டம்.
“சினிமா டைரக்டராக வேண்டும் என்ற கனவில் பல வருடங்களாக முயற்சித்து வருகிறார், சரவணன் என்ற இளைஞர். அவருக்கு தயாரிப்பாளர் ஒருவர் கிடைத்தார். அவரிடம் சரவணன் தன் கிராமத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை கதையாக கூற, தயாரிப்பாளருக்கு கதை பிடித்துப் போகிறது.
உடனடியாக படப்பிடிப்பு தொடங்கி, வேகமாக வளர்ந்து திரைக்கு வர தயாரானது. இந்த நிலையில், தயாரிப்பாளரின் மகளுக்கு டைரக்டர் சரவணன் மீது காதல் வருகிறது. அந்த காதலை ஏற்க சரவணன் மறுக்கிறார்.
அதன் பிறகு நடந்தது என்ன? அவர் இயக்கிய படம் வெளிவந்ததா? தயாரிப்பாளரின் மகள் என்ன ஆனாள்?
இப்படி பல முடிச்சுகளுடன் சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து, ‘சினிமா கனவுகள்’ படத்தை உருவாக்கி இருக்கிறோம்” என்கிறார், அதன் டைரக்டர் பிரபு ராமானுஜம். படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்தும் இருக்கிறார், இவர்.
பகவதி பாலா, மீரா, ஸ்ரீஜா, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், போண்டா மணி, ஸ்ரீலட்சுமி, கலைவாணி ஆகியோர் நடித்துள்ளனர்.
Related Tags :
Next Story