ஓட்டம்
அடர்ந்த காட்டில் ஓட்டம் சினிமா முன்னோட்டம்.
125 படங்களை இயக்கி சாதனை புரிந்தவர், மறைந்த டைரக்டர் ராம.நாராயணன். இவரிடம் ‘ராஜகாளியம்மன்’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘மண்ணின் மைந்தன்’ ஆகிய படங்களில் உதவி டைரக்டராக பணிபுரிந்த எம்.முருகன், ‘ஓட்டம்’ என்ற படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமாகிறார். படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்களையும் இவரே எழுதியிருக்கிறார்.
படத்துக்கு இசையமைத்து கதாநாய கனாகவும் நடிக்கிறார், எஸ்.பிரதீப்வர்மா. இவருக்கு ஜோடியாக பெங்களூருவை சேர்ந்த மாடல் அழகி ஐஸ்வர்யா சிந்தோஹி நடிக்கிறார். கேரளாவைச் சேர்ந்த அனுஸ்ரேயா இன்னொரு நாயகியாக அறிமுகம் ஆகிறார். வில்லன் வேடத்தில் தயாரிப்பாளர் ரவிசங்கர் நடிக்கிறார்.
சென்னை, கோவை, சிக்மகளூர் மற்றும் சக்கலேஷ்புராவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
‘‘இது மர்மங்கள் நிறைந்த திகில் படம். திடுக்கிடும் திருப்பங்களுடன் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது’’ என்கிறார், டைரக்டர் எம்.முருகன்.
Related Tags :
Next Story