மீண்டும்
படத்தின் சினிமா முன்னோட்டம் சரவணன் சுப்பையா இயக்கத்தில் ‘மீண்டும்’ சினிமா முன்னோட்டம்.
அஜித்குமார் நடித்து வெற்றி பெற்ற ‘சிட்டிசன்’, சினேகா நடிப்பில் வெளிவந்த ‘ஏ பி சி டி’ ஆகிய படங்களை இயக்கியவர், சரவணன் சுப்பையா. இவர் சில வருட இடைவெளிக்குப்பின், ‘மீண்டும்’ என்ற பெயரில் ஒரு புதிய படத்தை இயக்கியிருக்கிறார். அவர் கூறியதாவது:-
“இந்த படத்தில் சமூக பிரச்சினைகளுக்கு வழிதேடும் நாயகனாக கதிரவன் நடித்து இருக்கிறார். உண்மையை தேடிப்போகும் அவருக்கு குடும்பம், உறவு, வாழ்க்கை என வெவ்வேறு கோணங்களில் இருந்து எதிர்பாராத சிக்கல்கள் வருகிறது. இவைகளில் இருந்து தப்பி நாயகன் சகஜநிலைக்கு வந்தாரா, இல்லையா? என்பதை காதல், சென்டிமென்ட், அதிரடி சண்டைகள் கலந்து சொல்லியிருக்கிறோம்.
இதில் கதிரவனுடன் சரவணன் சுப்பையா, அனேகா, பிரணவராயன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, சுப்பிரமணிய சிவா, யார் கண்ணன், கேபிள் சங்கர், துரை சுதாகர் மற்றும் பலரும் நடிக்கிறார்கள். கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுத, நரேன் பாலகுமார் இசையமைத்து இருக்கிறார். படம் அடுத்த மாதம் (மார்ச்) திரைக்கு வரயிருக்கிறது”.
Related Tags :
Next Story