மழையில் நனைகிறேன்
மழையில் ஆரம்பித்து மழையில் முடியும் படம்.
“ஒரு இளைஞனும், இளம் பெண்ணும் கொட்டும் மழையில் சந்திக்கிறார்கள். இருவரும் வேறு வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். இது ஒன்று போதாதா? 2 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். காதல் ஜோடி எதிர்ப்புகளைச் சமாளித்து கொட்டும் மழையில் ஒன்று சேர்கிறார்கள்...”
-இப்படி சொல்பவர், ‘மழையில் நனைகிறேன்’ படத்தின் டைரக்டர், டி.சுரேஷ்குமார். இவர் மேலும் கூறுகிறார்:-
“இந்த படத்தில் அன்சன்பால், ரேபா மோனிகா ஜான் ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக நடித்துள்ளனர். ‘சங்கர்குரு’ ராஜா, மாத்யூ வர்கீஸ், அனுபமா குமார், சுஜாதா பஞ்சு, வெற்றிவேல் ராஜா ஆகியோரும் இருக்கிறார்கள். ராஜ்ஸ்ரீ வென்ச்சர்ஸ் தயாரித்துள்ளனர்.
படத்தின் உச்சகட்ட காட்சியை யாராலும் யூகிக்க முடியாது. அப்படி ஒரு கனமான ‘கிளைமாக்ஸ்’ இடம்பெறுகிறது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் பாராட்டி, அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில், ‘யு’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள்”.
Related Tags :
Next Story