டாக்டர்


டாக்டர்
x
தினத்தந்தி 21 Feb 2021 6:40 PM IST (Updated: 21 Feb 2021 6:40 PM IST)
t-max-icont-min-icon

கைகலப்பும், கலகலப்புமாக சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ சிவகார்த்திகேயன் நடித்து அடுத்து திரைக்கு வரும் படம், ‘டாக்டர்.’ இந்த படத்தை பற்றி அதன் டைரக்டர் நெல்சன் கூறியதாவது.

“நான் இயக்கி வெளிவந்த ‘கோலமாவு கோகிலா,’ காதல், மோதல், நகைச்சுவை ஆகிய அம்சங்கள் கலந்த படமாக அமைந்திருந்தது. அந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. திரையிட்ட இடங் களில் எல்லாம் வெற்றியை கொண்டாடினார்கள்.

அதேபோன்ற அதிரடி காட்சிகளுடன், ‘டாக்டர்’ படத்தில் கலகலப்பாக கதை சொல்லியிருக்கிறேன். கதைப்படி, சிவகார்த்திகேயன் ஒரு டாக்டர். மருத்துவ தொழிலுடன் அவருக்கு இன்னொரு வேலையும் இருக்கிறது. அதுபற்றி விளக்கமாக பேசினால், கதை வெளியே வந்துவிடும். கைகலப்பும், கலகலப்பும் கலந்த கதை இது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடித்து இருக்கிறார். வினய்ராய், வில்லனாக நடித்துள்ளார். யோகிபாபு, மிலிந்த் சோமன், அருண் அலெக்சாண்டர், சுனில் ரெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். சிவகார்த்தி கேயன், கொடாப்பாடி ஜே.ராஜேஷ் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பு முடிவடைந்தது. ‘டப்பிங்’ பணிகள் நடைபெறுகின்றன.”

Next Story