மஹா


மஹா
x
தினத்தந்தி 17 Aug 2018 5:27 PM (Updated: 17 Aug 2018 5:27 PM)
t-max-icont-min-icon

தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ஹன்சிகா, இதுவரை 49 படங்களில் நடித்து இருக்கிறார். அவருடைய 50-வது படத்துக்கு, `மஹா' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

குற்ற பின்னணியில், திகிலுடன் ஹன்சிகா நடிக்கும் 50-வது படம், `மஹா' இந்த படத்தின் மூலம் யு.ஆர்.ஜமீல் டைரக்டராக அறிமுகம் ஆகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். எட்சட்ரா என்டர்டைன்மென்ட் சார்பில் மதியழகன் தயாரிக்கிறார்.

இது, ஒரு குற்ற பின்னணியிலான திகில் படம். படத்தை பற்றி டைரக்டர் யு.ஆர்.ஜமீல் கூறுகிறார்:-

``ஹன்சிகா நடித்த 2 படங்களில், நான் உதவி டைரக்டராக பணியாற்றி இருக்கிறேன். ரசிகர்கள் மத்தியில் அவருக்கு உள்ள நட்சத்திர அந்தஸ்தை மனதில் வைத்து, இந்த கதையை எழுதினேன். ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் திறன் படைத்தது, இந்த கதை. கதைக்கு பொருத்தமானவர் ஹன்சிகாதான். தமிழ் ரசிகர்களுக்கு `மஹா' மறக்க முடியாத படமாக இருக்கும். இந்த படத்துக்கு பிறகு ஒரு இளவரசியாக ஹன்சிகா, தமிழ் திரையுலகில் நீடிப்பார்.''

``என் நிறுவனத்தின் சார்பில் தரமான படங்கள் மட்டுமே தருவது என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன். அதற்கு உகந்ததாக `மஹா' இருக்கும்'' என்கிறார், படத்தின் தயாரிப்பாளர் மதியழகன்.


Next Story