மியா


மியா
x
தினத்தந்தி 24 Jun 2018 7:05 PM (Updated: 24 Jun 2018 7:05 PM)
t-max-icont-min-icon

ஒரு பெண்ணின் விடாமுயற்சியை சொல்லும் ‘மியா’ இனியாவின் இசை ஆல்பம் மியா என்ற நடனப்பெண் ஒருவரின் வாழ்க்கைப் பதிவை 8 நிமிட வீடியோ ஆல்பமாக தயாரித்து நடித்து இருக்கிறார்.

தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழி படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருபவர், இனியா. இவர் நடிப்பு மட்டுமல்லாமல் நடனத்தையும் நேசித்து வருபவர். அதை உறுதி செய்வது போல், மியா என்ற நடனப்பெண் ஒருவரின் வாழ்க்கைப் பதிவை 8 நிமிட வீடியோ ஆல்பமாக தயாரித்து நடித்து இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

“மியா துடிப்புள்ள ஒரு பெண். பிரபல நடன கலைஞராக புகழ் பெற வேண்டும் என்பது இவளுடைய லட்சியம். அந்த லட்சியத்தை அடைய அவள் போராடுகிறாள். அதற்கு எவ்வளவோ தடை கற்கள். லட்சியத்தை அடைய வேண்டும் என்றால் முயற்சியை கைவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாள். அந்த உறுதி அவளை எப்படி வெற்றி அடைய வைக்கிறது? என்பதே ஆல்பத்தின் கதை.

வழக்கமான இசை ஆல்பம் மாதிரி இல்லாமல், ‘ஹைடெக்’ சினிமா நேர்த்தியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது, என் முதல் முயற்சி. இந்த ஆல்பத்தின் மூலம் வசூலாகும் பணத்தில், புற்று நோயினால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு மருத்துவ உதவி செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். இந்த உலகில் உள்ள அனைத்து நடன கலைஞர்களுக்கும், ‘மியா’வை காணிக்கை ஆக்குகிறேன்.”

Next Story