பார்ட்டி


பார்ட்டி
x
தினத்தந்தி 7 July 2017 12:33 PM IST (Updated: 7 July 2017 12:33 PM IST)
t-max-icont-min-icon

சென்னை-28, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, சென்னை-28 (இரண்டாம் பாகம்) ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், வெங்கட் பிரபு.

நட்சத்திர பட்டாளத்துடன் வெங்கட் பிரபு டைரக்‌ஷனில் ‘பார்ட்டி’

 இவர் டைரக்‌ஷனில் உருவாகும் புதிய படத்துக்கு, ‘பார்ட்டி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். படத்தை பற்றி டைரக்டர் வெங்கட் பிரபு கூறுகிறார்:-

“இந்த படத்தில் சத்யராஜ், நாசர், ஜெயராம், ஜெய் ஷிவா, ‘கயல்’ சந்திரன், சம்பத், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா கசன்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடிக்கிறார்கள். ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா தயாரிக்கிறார். பிரேம்ஜி அமரன் இசையமைக்கிறார். என் டைரக்‌ஷனில் உருவாகும் படத்துக்கு பிரேம்ஜி இசையமைப்பது, இதுதான் முதல் படம். அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தனது 25-ம் ஆண்டில், ‘பார்ட்டி’ படத்தை தயாரிக்கிறது.

‘சரோஜா’ மூலம் எனக்கு இரண்டாவது தாய் வீடாகி விட்ட அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத்துக்காக இந்த படத்தை இயக்குவதில், பெரும் மகிழ்ச்சி. ‘பார்ட்டி,’ தமிழ் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும்.”

Next Story