துல்கர் சல்மான் படத்தில் 4 கதாநாயகிகள்
‘வாயை மூடி பேசவும்,’ ‘ஓகே கண்மணி’ படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த துல்கர் சல்மான் அடுத்து,
தமிழ் -மலையாளம் ஆகிய 2 மொழிகளில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். பயணம் சார்ந்த கதையம்சம் கொண்ட படம், இது.
கெனன்யா பிலிம்ஸ் தயாரிக்கிறது. அறிமுக இயக்குனர் கார்த்திக் டைரக்டு செய்கிறார். படத்தை பற்றி இவர் சொல்கிறார்:-
“வழக்கமான காட்சிகள் இல்லாமல், புதுமையான மற்றும் தனித்துவமான ஒரு பயணம் சார்ந்த படமாக இது இருக்கும். படத்தில், 4 கதாநாயகிகள் இருக்கிறார்கள். நான்கு பேரின் கதாபாத்திரங்களும் நன்றாக வடிவமைக்கப்பட்டவை.
தமிழ்நாடு மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். தீனதயாளன் இசையமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப் பதிவு செய்கிறார்.”

Related Tags :
Next Story