மகிழ்திருமேனி டைரக்ஷனில் அருண் விஜய் நடிக்கும் 2- வது படம்
‘குற்றம் 23’ படத்தின் வெற்றியை அடுத்து அருண் விஜய், மகிழ்திருமேனி டைரக்ஷனில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார்.
படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இதற்கு முன்பு இருவரும் இணைந்து பணிபுரிந்த ‘தடையற தாக்க’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன், திரையுலகில் ஒரு திருப்பத்தையும் ஏற்படுத்தியதால், இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. இதுவும் ‘தடையற தாக்க’ பாணியில் காதல் கலந்த திகில் படம். ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. ‘கில்லி,’ ‘தூள்,’ ‘தில்’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கோபிநாத், இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். புது இசையமைப்பாளர் ஒருவர் அறிமுகம் ஆகிறார். ‘குற்றம் 23’ படத்தை தயாரித்த இந்தர்குமார் தயாரிக்கிறார். படத்தில் 3 கதாநாயகிகள் இருக்கிறார்கள். அதில் 2 பேர் முன்னணி நாயகிகளாக இருப்பார்கள் என்றும், ஒருவர் மும்பையை சேர்ந்த புதுமுகம் என்றும் படக்குழுவினர் கூறுகிறார்கள். படப்பிடிப்பு வருகிற 16-ந் தேதி தொடங்கி, சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் நடைபெற இருக்கிறது.
Related Tags :
Next Story