குழந்தை பெறுவதற்கு திருமணம் அவசியம் இல்லை - நடிகை தபு
இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தபு. இவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை.
முன்னணி நடிகையான தபு தமிழில் காதல் தேசம், தாயின் மணிக்கொடி, இருவர், சினேகிதியே உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் நடித்து வந்த இவர் இந்தி படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.
இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில், நடிகை தபு குழந்தை பெறுவது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், "அனைத்து பெண்களைப் போல எனக்கும் தாயாக வேண்டும் என்று ஆசை உள்ளது.
திருமணத்திற்கும், குழந்தை பெற்றுக்கொள்வதற்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் குழந்தைக்குத் தாயாக வேண்டும் என்பதற்காக கட்டாயம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாடகைத் தாய் மூலமாகக் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்" என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.