ஜீவி-2 படத்தின் டீசரை வெளியிட்டார் லோகேஷ் கனகராஜ்


ஜீவி-2 படத்தின் டீசரை வெளியிட்டார் லோகேஷ் கனகராஜ்
x

வெளியிட்ட ஜீவி-2 படத்தின் டீசரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.

விஜே கோபிநாத் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் 'ஜீவி'. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்த வெற்றியின் நடிப்பு அனைவரின் பாராட்டுகள் பெற்று, சர்வதேச பட விழாக்களிலும் இப்படத்திற்கு விருதுகள் கிடைத்தன. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜீவி படத்தின் 2-ம் பாகத்தின் அறிவிப்பு வெளியாகி பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. நடிகர் வெற்றி, இயக்குனர் விஜே கோபிநாத், இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி, நடிகர்கள் கருணாகரன், ரோகினி, மைம் கோபி என முதல் பாகத்தில் பணியாற்றிய அதே கூட்டணியுடன் ஜீவி இரண்டாம் பாகம் தொடங்கியிருந்தது. இ

ப்படத்தை மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. ஜீவி 2 படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் நிறைவடைந்த நிலையில், தற்போது ஜீவி-2 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இதனை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பெரிதும் எதிர்ப்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் தற்போது சமூக வலைத்தளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது.


Next Story