ரோஜா மகள் சினிமாவில் நடிப்பாரா?


ரோஜா மகள் சினிமாவில் நடிப்பாரா?
x

தமிழ், தெலுங்கு மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ரோஜா. பின்னர் குணசித்திர நடிகையாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்றார். டைரக்டர் ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அன்ஷு மாலிகா என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர். தற்போது ரோஜா ஆந்திர மந்திரியாக இருக்கிறார். இந்த நிலையில் அன்ஷு மாலிகா கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் இதற்காக நடிப்பு பயிற்சி எடுத்து வருவதாகவும் வலைத்தளங்களில் தொடர்ந்து தகவல் பரவி வருகிறது.

இதுகுறித்து ஆர்.கே.செல்வமணியிடம் கேட்டபோது அவர் அளித்த பேட்டியில், "எனது மகள் அன்ஷுமாலிகாவுக்கு படிப்பில் ஆர்வம் உள்ளது. இதற்காக அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.

கல்லூரியில் டாப் ரேங்க் மாணவியாக பெயர் எடுத்து இருக்கிறார். இதற்காக பல்கலைக்கழகம் பாராட்டி அவரை கவுரவப்படுத்தி உள்ளது.

எனது மகள் சினிமாவில் நடிப்பாரா என்று தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன அவருக்கு நடிப்பில் இதுவரை ஆர்வமில்லை. எங்கள் பிள்ளைகளுக்கு முடிவெடுக்கும் சுதந்திரத்தை நானும் ரோஜாவும் ஒரு பெற்றோராக வழங்கி வழி நடத்துகிறோம்.

படிப்பை முடித்த பிறகு எனது மகள் என்ன முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வோம்'' என்றார்.


Next Story