விஷால் நடித்துள்ள 'லத்தி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!


விஷால் நடித்துள்ள லத்தி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
x

நடிகர் விஷால் நடித்துள்ள 'லத்தி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

'அயோக்யா' திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஷால் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் 'லத்தி'. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஏ. வினோத்குமார் இயக்கியுள்ளார். நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார்.

லத்தி படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். 'ராணா புரொடக்சன்ஸ்' சார்பாக ரமணா மற்றும் நந்தா தயாரித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி லத்தி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 12-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதுகுறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த நடிகர் விஷால், படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.




Next Story