ஐமேக்ஸில் வெளியாகிறது விஜய்யின் 'லியோ' திரைப்படம்


ஐமேக்ஸில் வெளியாகிறது விஜய்யின் லியோ திரைப்படம்
x
தினத்தந்தி 13 Oct 2023 11:20 AM (Updated: 13 Oct 2023 11:22 AM)
t-max-icont-min-icon

நடிகர் விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் வருகிற 19-ம் தேதி வெளியாகவுள்ளது. சென்னையில் உள்ள ஒரு சில திரையரங்குகளில் லியோ படத்திற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 'லியோ' திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனை போஸ்டர் ஒன்றை பகிர்ந்து படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


Next Story